சலனமற்று சுவர்பார்த்துதுயிலவே பிடிக்கிறது
சுவரில் தெரியும் காரையும்
வெள்ளையும் சித்திரமாக
விரிந்து தினம் கதை சொல்லி
தூங்கசெய்யும் சுகம் பிடித்ததால்
என்னை விழுங்கவரும்
முதலையாக ஒருநாள்
மேகத்தில மிதக்கும்
ராணியாக நானும் ஒருநாள்
நதியிலே கரை தேடி
மரக்கட்டையாக மாறிய நான்
வெள்ளைதவிர வேறு நிறம்
அன்னியமானது ...
சுவரின் வெள்ளை உதிரும்போது
கனவின் நிறமும் வெளிருமோ?
விஷமாக தூவும் வெள்ளை
சலனமற்று வெறிக்கிறது
சுவர்பார்த்து தூங்கும் என்னை ......


