Sunday, September 19, 2010

எக்கணத்தில் கொண்ட காதல்!



நூலக புத்தகசாகரத்தில்
புதைந்திருந்த கணத்தில்

அங்காடியில் அழகுப்பொருட்களை
ஆராயும் அக்கணத்தில்

ஊர்திக்கு உணவிட
காத்திருந்த கணத்தில்

கடவுளிடம் கனவுகளை
மனுவளிக்கும் கருணைக்கணத்தில்

சுட்டெரிக்கும் சூரியனில்
நா நன்னீர் கேட்ட கணத்தில்

நண்பனின் காதல் நாதஸ்வரத்தில்
முடிந்த நல்ல கணத்தில்

சின்னக்குழந்தைக்கு கன்னம்
கிள்ளி கண்சிமிட்டி பிரிந்த கணத்தில்

மரணத்தை கண்டு மருண்டு
மவுனித்த கணத்தில்

மழையில் நனைந்து நான் கரைந்து
நானும் சூடான கணத்தில்

சகோதர சொந்தம் சுற்றி
சந்தோசப்பட்ட கணத்தில்

மனதிலிருப்பது கண்வழியே
கரையேற துடித்த துக்க கணத்தில்

என்று எதோ ஒரு கணத்தில் என்னை கடந்திருப்பாய்
அக்கணமே என் காதல் பிறந்த கணம்






Saturday, September 18, 2010

பேசுகிறேன்



 முதல் முதல் இடுகை எனக்கு பிடித்த பாடலில் இருந்து ஆரம்பிக்கிறேன், ஏனெனில் இதில் எனக்கு பிடித்தவை மட்டுமே இருக்கும்.