Thursday, October 14, 2010

உறக்கம் உதறி.....

இரவின் அழகிய இருட்டு 
வர்ணஜால கனவுகளை தூவுகிறது
கால்பற்றியிழுக்கும் உணர்வுகளை
முடிகோதி உள்ளிழுக்கும், 
பயப்போர்வை படரும் போது
கைநீட்டி தேடி அலைகிறேன்
மேலுதட்டில் துளிர்க்கும்
தேன்வியர்வையை மறந்து
திடுக்கிட்டு விழிக்கிறேன்
கருவண்ணம் பழகி கண் துழாவி
உற்று நோக்கும் போது
உள்ளிருந்து சிரிக்கிறாய்,  
உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்.......

8 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை தூள்.என்னைக்கவர்ந்த வரிகள்

>>>

மேலுதட்டில் துளிர்க்கும்
தேன்வியர்வையை ...

......>>>

தொடரட்டும்

rmkgreat said...

உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்

அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

Anonymous said...

//உற்று நோக்கும் போது
உள்ளிருந்து சிரிக்கிறாய்,
உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்.......//

தேன் வியர்வையைப் போலவே திகட்டவேயில்லை கவிதை உள்ளிருக்கும் காதல் உருத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் உருக்குலைவதில்லை காதல் மட்டும்

ரோஜா said...

நன்றி செந்தில் குமார், வருகைக்கும் வாழ்த்துக்கும் ...

ரோஜா said...

நன்றி R..M.K :)

ரோஜா said...

நன்றி தமிழரசி மேடம் ...

"உழவன்" "Uzhavan" said...

அருமையா இருக்கு

ரோஜா said...

நன்றி உழவன், வருகைக்கும் வாழ்த்துக்கும்

Post a Comment